இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள மின்னியலாளர்களுக்கு தேசிய தொழில் தகைமை (NVQ 3) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் திரு.ஜெயநாத் கேரத் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு, தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்சி பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் 60 மின்னியலாளர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் மேலதிக செயலர் க. சிவகரன், இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (தொடர்பாடல்) ஏ. ஜெயசூரியன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் ஆர். திருமுருகன், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் கே. கருணாகரன், மாவட்ட திறன் விருத்தி மாவட்ட இணைப்பாளர் நீலாம்பரன், பயிற்சியை நிறைவு செய்த மின்னியலாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

















No comments