யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆண்டுகளில் புதிய அணுகுமுறை, உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரக் கழிப்பறைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட அடிப்படை அபிவிருத்தித் திட்டங்கள் விரிவாக முன்னெடுக்கப்படவுள்ளன என கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 2 வீடுகளை பயணிகளிடம் கையளித்தார்.
அதன் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
மேலும் , பல ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தை பார்வையிட்டோம், அதனை தொழில்முனைவோர் உருவாக்க மையமாக (Entrepreneurship Staging Unit) மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்கிறோம் என்றும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும், கிராமிய பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என தெரிவித்தார்.













No comments