யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் 1 ஏக்கர் கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளுக்கான பரிந்துரைக் கடிதங்களை ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து பயனாளிகளுக்கு இன்றைய தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், 20 உற்பத்தியாளர் குழுக்களைச் சேர்ந்த 120 பயனாளிகளுக்கு (ஒவ்வொரு குழுவிலும் 6 உறுப்பினர்கள்) ஆரம்ப கட்ட தள அனுமதிக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் பயனாளிகள் கடல் அட்டைகள் வளர்ப்பிற்கான நீரியல் வளர்ப்பு முகாமைத்துவ அனுமதிப்பத்திரத்தை (Aquaculture Management Licence) பெற்றுக்கொண்டு உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும்.
இந்நிகழ்வில் தேசிய நீரியல் அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) தலைவர் கித்சிறி தர்மபிரிய, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் வனஜா செல்வரத்தினம், அமைச்சின் மற்றும் NAQDA-வின் அதிகாரிகள், உற்பத்தியாளர் குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.















No comments