ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பலாங்கொடை பிரதேச சபை உறுப்பினர், காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிப்பீட்டர் (Repeater Gun) ரக துப்பாக்கியொன்றை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், இது ஏதேனும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.









No comments