Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்


யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை 14ஆம் லியோவினால்  கடந்த 29ஆம் திகதி நியமனம் பெற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் இன்றைய தினம் புதன்கிழமை யாழ். மறைமாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

​யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த புதிய ஆயருக்கு, குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் மற்றும் மறைமாவட்ட குருக்களால் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

​இதனைத் தொடர்ந்து, ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்ற யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் குருக்களுடனான விசேட கலந்துரையாடலிலும் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் கலந்துகொண்டார்.






No comments