Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை


யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு, பவனியாக அழைத்துவரப்பட்டார்.

தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இத்திருப்பலியில் ஆயர், யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.

குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறை மாவட்டங்களின் ஆயர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள், சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.











No comments