வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த காணி இழந்த மக்கள் ஓரணியில் ஒன்றிணைந்து போராட்டங்களையும் , காணிகளை மீட்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது எனும் கூடி ஆராய்ந்துள்ளனர்
பாதுகாப்பு தரப்பினர், வனவள திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றால் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளன
அவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் காணிகளின் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடலை நடாத்தி இருந்தனர்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் "வடக்கு கிழக்கு மாகாண காணியிழந்த மக்களுக்கான காணி உரிமைக்கான தொடர் பயணம்" எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையிடலில் , "காணி இழந்த மக்களின் குரல்' அமைப்பின் பிரதிநிதிகளாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 07 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்துரையிடலில் கலந்து கொண்டனர்
காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துதல், தேவையான சந்தர்ப்பங்களில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சர்வதேச மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்கு பிரச்சினைகளை கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.








No comments