Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

14 வயது சிறுமி வன்புணர்வு - இளைஞனுக்கு 24 வருட சிறை


யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டு  , சட்டமா அதிபர் திணைக்களத்தால் , யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , விசாரணைகள் இடம்பெறு வந்தன. 

அந்நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்ட போது , எதிரியான இளைஞனை குற்றவாளியாக கண்ட மன்று , இளைஞனுக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் , பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது. 

No comments