Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.நீதியின் ஓலம் - 2 ; பேரணி


யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை  முன்னெடுக்கப்பட்டது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் செம்மணிச் சந்தியில் கடந்த நான்கு நாட்கள் இடம்பெற்றது.

அந்நிலையில் இறுதிநாளான இன்றைய தினம் திங்கட்கிழமை , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்.பொது நூலகத்திலிருந்து பேரணியாக மணிக்கூட்டு வீதிச் சந்தியை அடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக வேம்படிச் சந்தியை வந்தடைந்தனர்.

பின்னர்  கோயில் வீதியூடாக  பயணித்து நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஜநா அலுவலகம் வரை சென்று  ஐநா பிரதிநிதிகளிடம் மகஜர் ஒன்றையும் போராட்டக்கார்கள் கையளித்தனர்.

இந்தப் போராட்டத்தில், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.









No comments