Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய குற்றத்தில் கைதானவர்கள் விளக்கமறியலில்


யாழ்ப்பாணத்தில் சுமார் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் உள்ளிட்ட மூவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

சாவகச்சேரி பகுதியில் கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நவாலி பகுதியை சேர்ந்த நபரை கைது செய்தனர் 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர் 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கபப்ட்ட விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை , அடகு வைத்து பணத்தினை பெற்றமையும் , அதில் சுமார் எட்டரை இலட்ச ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்தமையையும் பொலிஸார் கண்டறிந்தனர்

அடகு பணத்தில் கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிள் மற்றும் , அடகு வைத்த நகை என்பவற்றை பொலிஸார் மீட்டதுடன் , சந்தேகநபர்கள் மூவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது 







No comments