Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வீடொன்றின் மீது தாக்குதல் - தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது


நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு , அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் 

நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் , நடாத்தி , வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் குறித்த உள்ளூராட்சி உறுப்பினர் தலைமையிலான கும்பல் சேதப்படுத்தி உள்ளது. 

இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

பொலிஸார் பொலிஸ் பிணையில் விடுவிக்க அரசியல் அழுத்தங்களும், பொலிஸ் உயர் அதிகாரிகளின் அழுத்தங்களும் தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. 

No comments