Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

குறிகட்டுவானுக்கு அருகில் படகு விபத்து - 10 பேர் மீட்பு


யாழ்ப்பாணம், குறிகட்டுவான் இறங்குதுறையில்  இருந்து நெடுந்தீவு நோக்கி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை பயணித்த படகு விபத்துக்குள்ளான நிலையில், படகில் பயணித்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்

குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து , பயணிகளை ஏற்றிக்கொண்டு நெடுந்தீவை நோக்கி பயணித்த சிறிய தனியார் படகு , புறப்பட்டு சில நிமிடங்களில், கடும் காற்று மற்றும் கடலடியால் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதனால் படகில் பயணித்த இரு படகோட்டிகள் உள்ளிட்ட 10 பேரும் கடலில் விழுந்த நிலையில், அதனை அவதானித்தவர்கள் துரிதமாக செயற்பட்டு, தமது படகுகளில் விரைந்து, கடலில் விழுந்தவர்களை மீட்டுள்ளனர். அதேவேளை ஓட்டி உள்ளிட்ட சிலர் நீந்தி கரைசேர வந்த நிலையில் அவர்களும் பாதுகாப்பபாக மீட்கப்பட்டுள்ளனர்.

படகில் பயணித்தவர்கள் உயிர்காக்கும் அங்கிகள் அணிந்திருந்தமையால் உயிராபத்து தடுக்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் படகு கடலில் கவிழ்ந்தமை தொடர்பிலும் , படகின் தரம் தொடர்பிலும்  கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments