வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை திருவிழா இடம்பெற்றது.
பத்தாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, திருமஞ்சத்தில், வள்ளி தெய்வானை சமேதரராய் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விசேட திருவிழாவான பத்தாம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி முருகப்பெருமானின் அருட்காட்சியை கண்டு களித்தனர்.
























No comments