Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் வளாகத்தில் தீப்பற்றிய முச்சக்கரவண்டி சாரதிக்கு UBER நிறுவனத்தினால் நிவாரணம்

நல்லூர் ஆலய சூழலில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அப்பகுதியில் நின்றவர்கள் விரைந்து செயற்பட்டு , தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியான கிருபாவிற்கு நிவாரணம் வழங்கும் முகமாக UBER நிறுவனத்தினால் ஒரு தொகை, நிதி வடமாகாண உரிமையாளர் திரு. தீசன் அவர்களால் சாரதி திரு. கிருபாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

திடீர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சாரதிக்கு வழங்கப்பட்ட இந்த நிவாரணம், அவரது இழப்பை ஓரளவு ஈடுசெய்யும் வகையில் அமைந்துள்ளது.

No comments