நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கநெடுந்தீவில் சுற்றுலா சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையிடலில் ஈடுபட்டார்
எதிர்வரும் காலங்களில் நெடுந்தீவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு உருவாகும் பொருளாதார வாய்ப்புகள் தொடர்பாக அதன் போது பிரதி அமைச்சர் விரிவாக விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச. பாவநாதராஜா, ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி, நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.









No comments