Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றத்தில் இளைஞன் கைது


யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து , கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிறவுண் வீதியில் உள்ள தனது வீட்டினுள் 14ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து , கத்தி முனையில் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய இளைஞன் ஒருவர் முயன்றதாக பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமெராக்களின் உதவியுடன் முன்னெடுத்த விசாரணையில் இளைஞன் ஒருவரை அடையாளம் கண்டு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். 

அந்நிலையில் குறித்த பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடமாடிய இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , 14ஆம் திகதி பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்தது தான் தான் பொலிசாரிடம் கூறியுள்ளார். 

குறித்த இளைஞன் இவ்வாறாக வேறு வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளாரா ? வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments