Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழு - நீதிமன்ற அனுமதியில்லாததால் திரும்பி சென்றது


செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி சென்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை விஜயம் செய்திருந்த  கனடா தூதுவர் தலைமையிலான  குழு செம்மணி அகழ்வாய்வு களத்தை பார்வையிடுவதற்கு சென்றுள்ளனர். 

அதன் போது அவர்களிடம், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள், நீதிமன்ற அனுமதியினை கோரிய வேளை, தாம் இலங்கை அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான துறைசார் அமைச்சிடம் அனுமதி கேட்ட நிலையில் ,  எங்களுக்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதால், நங்கள் இந்த இடத்தினை நேரில் பார்வையிட்டு , செல்வதற்கு முயற்சி செய்தோம் என கனடா நாட்டின் தூதுக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டது.

அதன் போது அங்கிருந்த சட்டத்தரணிகள் , செம்மணி அகழ்வாய்வு தளத்தை பார்வையிடுவதற்கு , அனுமதி கோரி நீதிமன்றில் விண்ணப்பம் செய்து , நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டாலே பார்வையிட முடியும் என எடுத்து கூறினார்கள். 

அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். 

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments