வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களின் புதுமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் தொழில்நுட்ப விழாவாக கருதப்பட்ட கண்காட்சி ‘NU InnoVista 2026’ எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் நொதோர்ன் பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் நடைபெற்றது.
மாணவர்களின் புத்தாக்கம், அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
மூன்று பிரிவுகளை உள்ளடக்கி நடைபெற்ற போட்டிகள் மற்றும் கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சியின் மூலம், மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதுடன், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் ஒரு சிறந்த களமாகவும், நாளைய உலகை ஆளப்போகும் எதிர்காலப் பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் ஒரு உன்னதமான தளமாகவும் இது அமையும் நம்பிக்கையுடன் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

























No comments