Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி - 210 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது


யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது 

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிசார் சுற்றி வளைத்தனர். 

வீட்டினுள் பொலிஸார் சென்ற வேளையில் பெரிய பரலில் எரிவாய்வை பயன்படுத்தி கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த 34 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்தனர் 

அதனை அடுத்து வீட்டில் ஏற்கனவே காய்ச்சி , விற்பனைக்காக வைத்திருந்த 210 லீட்டர் கசிப்பு , 160 லீட்டர் கோடா , ஒரு போத்தல் சாராயம் , எரிவாயு சிலிண்டர் பரல்கள் உள்ளட்டவற்றையும் சான்று பொருளாக பொலிஸார் மீட்டுள்ளனர் 

கைது செய்யப்பட்ட நபரை அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 





No comments