யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தூர் சிவன் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த வீட்டில் வயோதிப பெண்ணும் , அவரது மகனும் , வயோதிப பெண்ணின் பேரனான மகனின் மகனும் வசித்து வந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , குறித்த வீட்டிற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததுடன் , சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்
சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் , உயிரிழந்த வயோதிப பெண்ணின் மகனின் மகனே படுகொலை செய்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் , பேரனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்









No comments