Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாணவர்களுக்கு “சிப்தொர” புலமைப்பரிசில்


சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு சமுர்த்தி வங்கியில் அண்மையில்  வாழ்வாதார உதவி மற்றும் “சிப்தொர” புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

இதன்போது, 03 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளும், 14 மாணவர்களுக்கு “சிப்தொர” புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

அந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா கலந்து கொண்டு உதவி திட்டங்களை வழங்கி வைத்ததுடன் , "ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதும், ஒரு மாணவரின் கல்விப் பயணத்திற்கு ஆதரவளிப்பதும் எதிர்கால சமூகத்தை வலுப்படுத்தும் முதலீடுகளாகும்.

பொருளாதார ரீதியாக மக்களை வலுப்படுத்துவதுடன், கல்வியின் ஊடாக இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் இத்தகைய மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என தெரிவித்தார். 








No comments