வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இவ்வாறான பாரம்பரிய கைவினைப் பொருட்கள் சுற்றுலாவிகளை ஈர்க்கக்கூடியவையாக உள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய கைவினைக் கலைகளையும், கைவினைஞர்களின் ஆற்றல்களையும் வெளிக்கொணர்ந்து, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா – 2026 இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரகம் மற்றும் புடவைக் கைத்தொழில் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கண்காட்சியைப் பார்வையிட்ட ஆளுநர், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு கைவினைப் பொருட்களை நேரில் பார்வையிட்டதுடன், அவற்றை உருவாக்கிய கைவினைஞர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் படைப்பாக்க முயற்சிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற அரங்க நிகழ்வில் ஆளுநர் உரையாற்றும் போது,
இந்த நிகழ்வு வெறும் கண்காட்சியாக மட்டும் அமையவில்லை, கைவினைப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் தளமாகவும், புதிய தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பாகவும், பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் நிகழ்வாகவும் இது அமைகின்றது
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இவ்வாறான பாரம்பரிய கைவினைப் பொருட்கள் சுற்றுலாவிகளை ஈர்க்கக்கூடியவையாக உள்ளன
கைவினைஞர்கள் தமது பொருட்களை சுற்றுலாவிகளிடம் சந்தைப்படுத்துவதற்கான உரிய வாய்ப்புகளை வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என் தெரிவித்தார்
















No comments