Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கல்லுண்டாய் குப்பை மேட்டில் நேற்றும் தீ!


யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் 

தீ பரவியத்தை அடுத்து நீண்ட பல மணிநேர பெரும் போராட்டத்தின் மத்தியில் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் 

குப்பை மேட்டிலிருந்து எழும் அடர்ந்த புகையின் காரணமாக, அயலூர் மக்கள் இரவு முழுவதும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் 

அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அப்பகுதிகளில்  மாநகர சபை குப்பைகளை கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை நேரில் பார்வையிட்டு சென்றுள்ளனர் 

No comments