Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கீரிமலையில் பேரனார்த்ததை உருவாக்கியவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை - உறுப்பினர்கள் கேள்வி


கீரிமலை பிரதேசத்தில் கட்டுப்பாடின்றி கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் , அதனை பார்வையிட்ட வடமாகாண ஆளுநர் "இதொரு பேரனார்த்தம்" என கூறியுள்ள போதிலும் , அதற்கு காரணமானவர்களை எதிராக ஏன் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என வலி. வடக்கு பிரதேச சபை அமர்வை புறக்கணித்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

வலி. வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி.வடக்கு மற்றும் வலி தெற்கு பிரதேச சபைகளால் கட்டுப்பாடு இன்றி கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் , அவற்றை மீள அள்ளுமாறு வடமாகாண ஆளுநர் , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் , உதவி ஆணையாளர் உள்ளிட்டவர்கள் இரண்டு பிரதேச சபை செயலர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு பணித்துள்ளனர்,

இந்நிலையில் கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகள் அள்ளும் பணிகள் மந்த கெதியில் நடைபெறுவதாகவும் , அதனை துரித கெதியில் இயந்திர வலுக்களை பயன்படுத்தி அகற்ற வேண்டும் என கோரி வலி. வடக்கு பிரதேச சபையின் 10 உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்தனர். 

அவ்வாறு சபை அமர்வை புறக்கணித்த 10 உறுப்பினர்களும் கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, 

ஆளூனர் . உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் கழிவுகளை இயந்திர வலுக்களை பயன்படுத்தி துரிதமாக மீள அள்ளுமாறு பணித்துள்ள போதிலும் , தவிசாளர்களோ செயலாளர்களோ அது தொடர்பில் கவனம் செலுத்தாது , மனித வலுக்களை பயன்படுத்தி மிக மந்த கெதியில் கழிவுகளை அகற்றுகின்றனர். 

பருவ மழை ஆரம்பிக்க முன்னர் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றவே கோரி வருகிறோம். எதிர்வரும் மாதங்களில் பருவ மழை ஆரம்பித்து விடும். அதன் பின்னர் இங்கே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் நிலத்தடி நீருடன் கலந்து விடும். 

அவ்வாறு நிலத்தடி நீருடன் கழிவுகள் கலந்தால் , வலி.வடக்கு பிரதேசம் மாத்திரமின்றி வலி. தெற்கு பிரதேச நிலத்தடி நீரும் மாசுபடும். அதன் பின்னர்  நீரினை பரிசோதித்து , இந்த நீரினை குடிப்பதற்கு பயன்படுத்தாதீர்கள் என சுத்திகரிக்கப்பட்ட நீர் என பணம் கொடுத்து நீரினை வாங்க வைக்க போகிறார்களா ?

எனவே மழைக்கு முதல் எவ்வளவு வேகமாக கழிவுகளை அகற்ற முடியுமோ அவ்வளவு வேகமாக கழிவுகளை அகற்ற வேண்டும். 

வடமாகாண ஆளுநர் இந்த இடத்தை பார்வையிட்ட போது "இதொரு பேரனார்த்தம்" என குறிப்பிட்டு இருந்தார். அவ்வாறு பேரனார்த்தம் ஏற்பட காரணமானவர்களுக்கு எதிராக ஏன் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 

அதேவேளை சபை அமர்வை புறக்கணித்த 10 உறுப்பினர்களும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று , மிக விரைவாக இயந்திர வலுக்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்ற ஆளூனர் உத்தரவிட்டுள்ள போதிலும் , கழிவகற்றல் பணிகள் மந்த கெதியில் உள்ளதாக முறையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது 





No comments