Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தியாக தீபத்தின் சிலையை மீள நிறுவு - யாழில் மூன்றாவது நாளாகவும் போராட்டம்


யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது நாளாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமையும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தியாக தீபத்தின் நினைவாலயம் பகுதியில் தியாக தீபத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வான கடந்த 15ஆம் திகதி சிலை வைக்கப்பட்டு , தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, கடந்த சனிக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நினைவிவாலயத்திற்கு யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் , இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.

பொலிஸாரினால் சிலை பெயர்த்து எடுத்து செல்லபப்ட்டதனை கண்டித்தும் , மீள அந்த சிலையை அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

அதேவேளை குறித்த சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என சிலை எடுத்து செல்லப்பட்ட தினமான ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபனின் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மறுநாள் திங்கட்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 






No comments