வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவை உதவியாளர்கள் 350 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நியமனங்களில் 50 நியமனம் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாகாண சுகாதார அமைச்சினால், நியமனங்களுக்காக 3,550 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட முறையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டதன் பின்னர் 300 பேர் மாகாண சுகாதார சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், நிதி, நிர்வாகம் மற்றும் பொறியியலுக்கான பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், மத்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது மருத்துவமனைகளின் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












No comments