தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
தியாக தீபத்தின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நினைவிடத்திற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் அனுமதியின்றி ஒலி பெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக கூறி அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.
பொலிஸார் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்யும் போது போலீசாரின் வாகனத்தினுள் சிவில் உடையில் இருந்த பெண்ணொருவர் அவற்றை தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவு செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வேலணை பகுதியில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நடைபெற்ற இடத்திற்கு சென்ற ஊர்காவற்துறை பொலிஸார் ஒலிபெருக்கி சாதனத்தை பறிமுதல் செய்துள்ளதுடன் , உடுவில் பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்விடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸாரும் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்













No comments