Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆட்சியாளர்களை மாற்றுவது மட்டும் அரசியல் மாற்றமல்ல


பழைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் பயணத்தை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

வடமராட்சியின், உடுப்பிட்டி மற்றும் வதிரி பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகள் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டது. 

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்தொழில் அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

ஆட்சியாளர்களை மாற்றுவது மட்டும் அரசியல் மாற்றமல்ல. அரசியல் செய்யும் முறையையே மாற்றுவதுதான் உண்மையான மாற்றம்.

மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தில் அமர்ந்து மக்களிடமிருந்து விலகி நிற்கும் அரசியலுக்குப் பதிலாக, மக்களுடன் இணைந்து, மக்களின் பிரச்சினைகளை மக்களிடமிருந்தே கேட்டறிந்து, தீர்வுகளை மக்களின் பங்கேற்புடன் உருவாக்கும் அரசியலை தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்புகிறது.

அந்த மாற்றத்தின் அடிமட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வடமராட்சியின் உடுப்பிட்டி மற்றும் வதிரி பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன.

இது வெறுமனே ஒரு அமைப்பு உருவாக்கும் நிகழ்வு அல்ல.மக்களின் குரல் முடிவெடுக்கும் இடத்தை நோக்கி நகரும் புதிய அரசியல் பயணத்தின் ஒரு முக்கியமான படியாகும் என மேலும் தெரிவித்தார். 


No comments