“இன்றைய சிந்தனை எதிர்கால கண்டுபிடிப்புக்கான அடித்தளம்!" எனும் கோட்பாட்டிற்கு அமைவாக, வட மாகாண பாடசாலை மாணவர்களின் புதுமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் மாபெரும் தொழில்நுட்ப விழாவானது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
மாணவர்களின் புத்தாக்கம், அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், ‘NU InnoVista 2026' எனும் கண்காட்சியை (Educational & Science Exhibition) SLIIT Northern Uni இல் எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடாத்தத் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நொர்தேன் யூனி வளாகத்தில் நடைபெற்ற போது, அதில் துனைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
இப்போட்டியானது மூன்று பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது:
1. Discovery Lab: புதுமைக் கண்டுபிடிப்புகளின் அரங்கம்
அன்றாடச் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்புகளையும் நவீன தொழில்நுட்பங்களை எவ்வாறு ஒருங்கிணைத்துப் பயன்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இக்கண்காட்சியானது கீழ்வரும் மூன்று பிரதான பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளது:
1. நிலையான மற்றும் பசுமை கணினி தொழில்நுட்பம் (Sustainability & Green Computing).
2. தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் (Future of IT) ·
3. புத்தாக்க வணிக எண்ணங்கள் (Business Innovation Ideas)
2. Vision Lens: கலையூடாக படைப்புகளை நுண்ணறிவுடன் இணைக்கும் அரங்கம் "புதிய சிந்தனைகளால் வட மாகாணத்தின் எதிர்காலத்தை வடிவமைப்போம்" எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறும் Vision Lens போட்டிகள், மாணவர்களின் கற்பனையையும் நிழற்படக் கலையையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு அரிய இப்போட்டியானது இரண்டு வகைகளின் கீழ் நடைபெறுகின்றது வாய்ப்பாகும்.
1. வகை 01: வரைதல் (Hand Drawing) – தனிநபர் போட்டி
2. வகை 02: நிழற்படமும் செயற்கை நுண்ணறிவுப் ឈប់ ( Photography & AI Generated Art) – தனிநபர் அல்லது குழுப் போட்டி
3. CodePark : இப்போட்டியானது இரு தலைப்புக்களின் கீழ் நடைபெறுகின்றது:
வகை 01 – No-Code செயலி உருவாக்கம்
"பாடசாலை சார்ந்த இலத்திரனியல் தீர்வுகள்" இதில் Coding Scripts எதுவுமின்றி, இலகுவாக பிரச்சனைகளுக்கான Drag-and-Drop முறையை பயன்படுத்தி தீர்வுகளை MIT App Inventor, Thunkable, Google Sites, Glide, Softr, Wix ஆகிய தளங்களின் ஊடாக உருவாக்கலாம்.
வகை 02 – Low-Code செயலி உருவாக்கம்.
"சமூக மேம்பாட்டிற்கான தொழில்நுட்பம்" இதில் Drag- and-Drop Light Coding, Database Querying அல்லது API தொடர்புகளைப் பயன்படுத்தித் தீர்வுகளை உருவாக்கலாம்.
இந்நிகழ்வின் மூலம், மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதுடன், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் ஒரு சிறந்த களமாகவும், நாளைய உலகை ஆளப்போகும் எதிர்காலப் பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் ஒரு உன்னதமான தளமாகவும் இது அமையும் எனும் நம்பிக்கையுடன் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.









No comments