Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சமூக ஊடக தகவல்கள் மறைந்து போகக்கூடியவை


ஒரு மனிதன் அறிவிலும் சிந்தனையிலும் முழுமையடைவதற்கு வாசிப்பு இன்றியமையாதது. அறிவைத் தேடும் பயணம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய ஒன்றாகும். வாசிப்புப் பழக்கத்தை அடுத்த தலைமுறையிடம் வளர்ப்பதற்கு முன்னர், பெரியவர்களான நாமே வாசிப்பை எமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமான யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில், 

ஒரு மனிதன் முழுமையடைவது வாசிப்பின் ஊடாகவே. அறிவைத் தேடும் இந்தப் பயணம் ஒரு குறிப்பிட்ட வயதுடன் முடிவடைவதில்லை, வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய ஒன்றாகும் 

 அறிஞர் அண்ணா, சத்திரசிகிச்சைத் தருணத்திலும் தாம் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடிப்பதற்கு நேரம் கேட்ட சம்பவம், வாசிப்பு ஒருவரது வாழ்வில் எந்தளவு ஆழமான இடத்தைப் பெற முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் 

இன்றைய சமூக ஊடகச் சூழலில் நல்லவை, கெட்டவை, உண்மையானவை, பொய்யானவை எனப் பல்வேறு தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன, சமூக ஊடகங்களில் நாம் வாசிக்கும் தகவல்கள் பெரும்பாலும் விரைவாக மறைந்து போகக்கூடியவை அல்லது மறக்கப்பட்டுவிடக்கூடியவை 

 அதற்கு மாறாக அச்சுப் புத்தகங்கள் நீண்ட காலத்துக்குப் பாதுகாக்கப்படக்கூடியதுடன், தேவையான எந்த நேரத்திலும் மீண்டும் எடுத்துப் படித்து பயன்பெறக்கூடிய நிலையான அறிவு வளங்களாகத் திகழ்கின்றன 

இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு நூல்களையும் பதிப்பகங்களையும் ஒரே இடத்தில் ஒன்றிணைப்பதன் மூலம் வாசகர்கள் பல இடங்களுக்கு அலைந்து திரியாமல் தமக்குத் தேவையான நூல்களை எளிதாகத் தெரிவுசெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாக் காலத்துடன் இணைந்ததாக இப்புத்தகத் திருவிழா நடைபெறுவது, பெருமளவான மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இளைஞர்கள் தமது வாசிப்புப் பழக்கத்தை மென்மேலும் வளர்த்துக்கொள்வதுடன், இதுவரை அறியாத புதிய விடயங்களைத் தேடிக் கற்றுக்கொள்வதற்கும் இத்தகைய நிகழ்வுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

மேலும், புத்தகங்களை வாங்குவது அல்லது வாசிப்பது என்பது வெறுமனே ஒரு தனிப்பட்ட பழக்கமாக அல்லாது, தனிமனித அறிவு வளர்ச்சிக்கும் 

No comments