Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பம்


யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த 'யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா – 2026' இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.  

நல்லூர் ஆலயத்தை அண்மித்த சங்கிலியன் பூங்காவில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமான புத்தக திருவிழா எதிர்வரும் 09ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் இரவு 08 மணி வரை நடைபெறவுள்ளது 

புத்தக திருவிழாவில் சிறுவர் கதை சொல்லல் , ஓவிய போட்டிகள் , சதுரங்க போட்டிகள் , சிறுவர் நாடகங்கள் முத்திரை கண்காட்சி போன்றவையும் நடைபெறவுள்ளது

இன்றைய ஆரம்ப நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்   நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாண மாநகர  முதல்வர் மதிவதனி மற்றும் யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 







No comments