Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு


கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை மீள அள்ளுமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் கடுமையான உத்தரவின் பிரகாரம் கழிவுகள் மீள அள்ளப்படுவதனையும் , கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளையும் வடமாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டனர்

கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினர் சுமார் 300 டிப்பர் கழிவுகளையும் , வலி. வடக்கு பிரதேச சபையினர் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய கழிவுகளையும் கொட்டியிருந்தனர். 

இது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ,கடந்த 17ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் சபை அமர்வினை புறக்கணித்தனர் 

அதனை அடுத்து வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சன் , மத்திய சுற்றாடல்துறை அதிகார சபையினர் உள்ளிட்ட தரப்பினர் கீரிமலையில் குப்பைகளை கொட்டிய இடங்களை நேரில் பார்வையிட்டு , மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையினருக்கு கடுமையான உத்தரவினை பிறப்பித்திருந்தார். 

அதனை தொடர்ந்து வலி. தெற்கு பிரதேச சபையினர் தாம் கொட்டிய கழிவுகளையும் , வலி. வடக்கு பிரதேச சபையினர் தாம் கொட்டிய கழிவுகளையும் மீள அள்ளி வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உதவி உள்ளூராட்சி ஆணையாளரும் நேரில் பணிகளை பார்வையிட்டார். 

இந்நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமையில் , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வலி. வடக்கு மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர்கள் உள்ளிட்டோர் கழிவுகளை மீள அள்ளும் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.  

அதேவேளை, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினருக்கு பணிக்க வேண்டும் என கோரி  கடந்த ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி வடமாகாண ஆளுநருக்கு வலி. வடக்கு பிரதேச சபையின் 26 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மகஜர் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments