யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் காலமான தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா நினைவு நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நினைவுரைகளை செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ் இந்திய துணை தூதர் சாயிமுரளி செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.
நிகழ்வில் கலந்து கொண்டு பேராசிரியர் பாப்பையாவின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்த ஆர்வலர்களை தமிழ்ச்சங்கத்தினர் அழைத்து உள்ளனர்.









No comments