வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை 22ஆம் திருவிழா இடம்பெற்றது.
22ஆம் திருவிழாவின் போது , வள்ளி தெய்வானை ஆகியோர் தலா மூன்று குதிரைகளிலும், வேல் பெருமான் பெரிய குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.















No comments