நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து வருகை தந்த கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி சாரதா ராகவ் மற்றும் அவரது குழுவினரால் வழங்கப்பட்ட கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி, யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், கலைமாமணி சாரதா ராகவ்வுடன் மிருதங்க கலைஞர் ரமேஷ், விசைப்பலகை கலைஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட இசைக் கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் , வடமாகாண ஆளுநர் நா வேதநாயகன் , யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பி, வவுனியாப் பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்















No comments