Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு - சுற்று வீதிகளும் திறப்பு


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைந்த நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை வைரவர் உற்சவம் நடைபெற்றது.

ஆலய மகோற்சவம் கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி , 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று , கடந்த  வியாழக்கிழமை  கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. 

அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை முருக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று , நேற்றைய தினம் சனிக்கிழமை வைரவர் சாந்தி நடைபெற்றது. 

அதேவேளை , நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாக்களை முன்னிட்டு , ஆலய சுற்று வீதிகள் கடந்த 16ஆம் திகதி முதல் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு , வீதிகள் மூடப்பட்டிருந்தன. நேற்றைய தினம் வைரவர் சாந்தி நிறைவடைந்ததும் , வீதிகள் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டன.







 

No comments