Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அநுராதபுரத்தில் யானை தாக்கி இருவர் உயிரிழப்பு



அனுராதபுரம் – கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளது.

கெப்பித்திகொள்ளாவ  பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய  செனவிரத்னகே ஸ்ரீ பால மற்றும் 51 வயதுடைய சமரக்கோன் அப்புஹாமிலாகே சுகத் சுமனரத்ன ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் தமது வாழ்வாதாரத்திற்காக சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சிறிய காட்டுப் பகுதியொன்றை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, அருகில் வந்த யானையொன்று இருவரையும் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments