கொழும்பு - தெஹிவளை - கவுடான சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் மீது கைக்குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் வீட்டில் இருந்த 52 வயதுடைய தந்தையும்,
அவரது 10 மற்றும் 14 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் தந்தை தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைக்குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.









No comments