Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். பாடசாலையில் இருந்து மகளை ஏற்றி சென்றவர் புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழப்பு


பாடசாலையில் இருந்து மகளை ஏற்றி சென்ற தந்தை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில் , பாடசாலை மாணவியான மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

யாழ்ப்பாணம் அரியாலை பூங்கன்குளம் புகையிரத நிலையத்திற்க்கு அருகிலையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

பாடசாலை முடிந்து மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ,வீடு நோக்கி தந்தை பயணித்துக்கொண்டிந்த வேளை , பூங்கன்குளம் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளை , புகையிரத்தத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது 

விபத்து தந்தை சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மகள் படுகாயமடைந்த நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

No comments