இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றுக்கு , தமிழக படகோட்டிக்கு , 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்த மன்று , 4 மில்லியன் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி படகொன்றில் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் படகோட்டி உள்ளிட்ட 09 பேரை கடற்படையினர் கடந்த 03ஆம் திகதி கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட 09 பேரையும் மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 09 பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்
அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் , படகோட்டிக்கு 06 மாத கால சிறைத்தண்டனை வழங்கி , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்த மன்று , 4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அபராத பணத்தினை செலுத்த தவறின் 3 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று உத்தரவிட்டது.
அத்துடன் , ஏனைய 08 பேருக்கும் 2 வருட சிறைத்தண்டனை விதித்த மன்று , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.









No comments