Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். அப்துல் கலாமின் பிறந்தநாள் கொண்டாட்டம்


யாழ்ப்பாணத்தில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் நிகழ்வும், உலக மாணவர்கள் தினமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம், கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் அ. கஜேந்திரன் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்வில், மாணவர்களுக்கு லட்டுகள் வழங்கப்பட்டு, அப்துல் கலாமின் பிறந்தநாள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15ஆம் திகதி அன்று,  'சர்வதேச  மாணவர்கள் தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. 











No comments