Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கோப்பாய்க்கு மதுபான சாலை வேண்டாம்


யாழ்ப்பாணம் , கோப்பாய் பிரதேச செயலக பகுதியில், புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கோப்பாய் பிரதேச சபையின் முன்பாக  இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில், சங்கானை , கோப்பாய் , தெல்லிப்பழை மற்றும் கரவெட்டி ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் தலா ஒன்று என்ற அடிப்படையில் புதிதாக நான்கு மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட காங்கேசதுறை பகுதியில் கொடுக்கப்பட்ட மதுபான சாலைக்கான அனுமதியை இரத்து செய்ய கோரி  தெல்லிப்பழை சந்தியில் கடந்த வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. 

மறுநாள் வெள்ளிக்கிழமை சங்கானை பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதியினை இரத்து செய்யுமாறு , சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டு , சங்கானை பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நெல்லியடி பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கான அனுமதியினை இரத்து செய்ய கோரி மண்டான் கலைநேசன் சனசமூக நிலையத்டிற்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, மண்டானில் அமைந்துள்ள மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பு அதிகாரியிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கோப்பாய் பிரதேச சபை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 








No comments