நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 09 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்தொழிலாளர்களின் படகினை கைப்பற்றியதுடன் , அதில் இருந்த 09 பேரையும் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட 09 கடற்தொழிலாளர்களையும் , அவர்களின் படகையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்ற கடற்படையினர் ,கைது செய்யப்பட்ட 09 பேரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்









No comments