Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் குருதி தட்டுப்பாடு


 'O-நெகட்டிவ்' வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் தன்னார்வ குருதி கொடையாளர்க்ள விரைந்து இரத்ததானம் செய்து பலரது உயிர்களை காப்பாற்ற உதவுமாறு பருத்தித்துறை இரத்த வங்கியினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நாளாந்தம் சுமார் 10 அலகு குருதி தேவைப்படும் நிலையில் 4 அலகு குருதியே கையிருப்பில் உள்ளது. 'ஓ நெகட்டிவ்' உள்ளிட்ட எந்தவொரு நெகட்டிவ் வகை குருதி கையிருப்பு முற்றாக தீர்ந்து போயுள்ளது. இந்நிலை மிக மிக அபாய நிலையாகும்.

தற்போதைய நிலையில் விபத்தில் சிக்கிய ஒருவர் தீவிர சிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் உடனடியாக ஏற்றுவதற்கு 'ஓ நெகட்டிவ்' வகை குருதியே வழங்கியாக வேண்டும். தற்போது எம்மிடம் இல்லாத நிலையில் யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் இருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

'ஓ நெகட்டிவ்' வகை குருதி அவசர தேவையாக உள்ளது. இன்னும் சில நாட்களில் சகல வகை குருதிக்கும் தட்டுப்பாட்டு நிலை ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. 

எனவே வடமராட்சி பகுதியில் வசிக்கும் தன்னார்வ குருதி கொடையாளர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரடியாக வருகைதந்து இரத்த தானம் செய்யுமாறும் இரத்ததான முகாம்களை ஒழுங்கமைக்கக் கூடியவர்கள் தெரியப்படுத்துமிடத்து நேரடியாக வந்து குருதி சேகரிப்பினை முன்னெடுக்க முடியும் எனவும் (தொடர்டபுக்கு - 0212261345) பருத்தித்துறை இரத்தவங்கி பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments