யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இலங்கை நீர்வளச் சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள நீர்வளச் சபையின் காணியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அந்தோன் ஜயகொடி ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.
புதிதாக நிறுவப்படவுள்ள இந்த நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு, வடக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாத்தல், அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நீர்வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்தல் போன்ற பணிகளில் முக்கிய பங்காற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது





.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



No comments