யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் ஊடாக சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை பணம் உள்ளிட்ட சுமார் எட்டரரை கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடன் பயணித்த 05 சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியதுடன் , மாதகல் பகுதியை 32 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்
மாதகல் பகுதியில் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் மாதகல் பகுதியில் உள்ள சுமார் 7 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அதிசொகுசு மாடி வீடு உள்ளிட்டவை தொடர்பில் உரிய பதில்களையும் வருமான வழிகளையும் காட்ட தவறியுள்ளார்.
அதனை தொடர்ந்து பணசலவை தடுப்பு சட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் சொகுசு வீடு என்பவற்றை தொடர் விசாரணைகளுக்காக முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு உத்தரவிட்டுள்ளது.





.jpeg)



No comments