Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பலாலியில் 18ஆவது வாரமாக முன்னெடுக்கப்படும் போராட்டம்


இராணுவம் கையகப்படுத்திவைத்துள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் நிலமீட்பு போராட்டம் இன்று 18 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.

பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன வருகின்றனர்.

நீண்டகாலமாக தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தையும் பூர்வீக உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பலாலி பகுதியை சேர்ந்த மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 18ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

No comments