தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாக முன்னெடுக்கப்பட்டது.
36 வருடங்களுக்கு முன்னர் தமது பூர்வீகக் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இன்னமும் மீள்குடியேற்றப்பட அனுமதிக்கப்படாத நிலையில் , தமது காணிகளை விரைவில் விடுவித்து, அவற்றில் தம்மை மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
வலி. வடக்கு பகுதியில் 2034.97 ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில், பிரதி வெள்ளிக்கிழமைகளில் மயிலிட்டி பகுதி மக்களும் , பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி மற்றும் வசாவிளான் மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வலி. வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 1.29 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 2033.68 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












No comments