Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். அடுக்குமாடி வீட்டு திட்ட தொகுதி ?


யாழ்ப்பாண நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு, வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்த 257 பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அமைச்சர்  அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கு, கிழக்கு மக்கள் பல்வேறு நெருக்கடிகளையும் இழப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர்.

 யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீடுகளையும் சொத்துக்களையும் உடைமைகளையும் இழந்த மக்களின் வாழ்க்கையில் மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

மீள்குடியேற்ற வீடமைப்புத் திட்டத்தின் கீழ், 13,000 இற்கும் அதிகமான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எதிர்வரும் காலங்களில் அனைவருக்கும் வீடுகளை வழங்கி, மீள்குடியேற்றம் என்ற தேவை இல்லாத நிலையை உருவாக்குவதே ஜனாதிபதியின் இலக்காகும்.

அதேவேளை, வீட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. முன்னர் ஐந்து இலட்சம் ரூபாவாக இருந்த வீட்டுத் திட்ட நிதி பின்னர் பத்து இலட்சம் ரூபாவாகவும், அதனைத் தொடர்ந்து பதினைந்து இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டு, தற்போது இருபது இலட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மக்கள் தமது சொந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான வாய்ப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருபது இலட்சம் ரூபா வீட்டுத் திட்டத்தின் கீழ் 833 வீடுகள் அமைக்கப்படுகின்றன. 

அவற்றில் வீட்டின் நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்த 257 வீடுகளுக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 பயனாளிகள் தமது வீடமைப்புப் பணிகளை விரைவாக நிறைவு செய்து, இவ்வாண்டின் இறுதிக்குள் வீடுகளில் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் ஆண்டிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இருப்பினும், குறிப்பாக யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் காணிப் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. இதற்குத் தீர்வாக, நகர எல்லைக்குள் வாழும் மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்மாடிக் குடியிருப்புத் திட்டங்களை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

வீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் தமது வீடமைப்புப் பணிகளைத் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து, தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதும் கௌரவமானதுமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

No comments