யாழ்ப்பாணத்தில் தமது வீடமைப்புப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்த பயனாளிகளில் முதற்கட்டமாக 257 பேருக்கு, உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற இந் நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் நிதியுதவியுடன், இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்த மக்களுக்காக 2026ஆம் ஆண்டில் தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியில் 833 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் தற்போது வீடமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், குறித்த அமைச்சின் நிதியுதவியுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 281 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. :
இந் நிகழ்வில், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர். எஸ். கபிலன், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், வீட்டுத்திட்டப் பயனாளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்









No comments